கனவை வென்ற அஜித்! வாழ்த்து கூறிய திரைப் பிரபலங்கள் யார் யார்?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, கார் ரேஸிங்கிலும் அதிக ஆர்வம் கொண்ட இவர், அஜித்குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை சமீபத்தில் தொடங்கியிருந்தார். மேலும், இந்த நிறுவனத்தின் சார்பில், துபாயில் நடைபெற்ற H24 என்ற கார் பந்தயத்தில் கலந்துக் கொண்டார்.

நேற்று இந்த போட்டி முடிவடைந்த நிலையில், நடிகர் அஜித்தின் அணி 3-ஆம் பிடித்து, சாதனை படைத்துள்ளது. இவரது இந்த வெற்றியை அறிந்த திரையுலக பிரபலங்கள் பலர், தங்களது வாழ்த்துக்களை, இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

அதாவது, இயக்குநர்கள் சிவா, வெங்கட் பிரபு, அமீர், நடிகர்கள் சிவகார்த்திகேயன், கமல் ஹாசன், நாக சைத்தன்னயா, ரஜினிகாந்த், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர், தங்களது வாழ்த்துக்களை நடிகர் அஜித்துக்கு தெரிவித்துள்ளனர். மேலும், பல்வேறு பிரபலங்களும், அவருக்கு தொடர்ச்சியாக வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News