பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 பகுதிகளில், பொங்கல் பண்டிகையின் 3 நாட்களில் முறையே ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
நேற்று அவனியாபுரம் பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இன்று காலை 8 மணிக்கு, பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 10 சுற்றுகளாக நடைபெற்ற இந்த போட்டியில், 900-க்கும் மேற்பட்ட காளைகள் களம் கண்டன. இந்நிலையில், தற்போது பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றுள்ளது.
இதில், 14 காளைகளை அடக்கிய நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்பவருக்கு முதல் பரிசாக, கார் வழங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்பவர், 13 காளைகளை அடக்கி 2-ஆம் இடம் பிடித்தார். மேலும், பொதும்பு பகுதியை சேர்ந்த பிரபாகரன், 11 காளைகளை அடக்கி, 3-ஆம் இடம் பிடித்தார். இதேபோல், முதலிடம் பிடித்த காளைக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.