தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஜி.வி.பிரகாஷ். இவர், பாடகி சைந்தவியை திருமணம் செய்துக்கொண்டு, 10 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த வருடம் திடீரென விவாகரத்தை அறிவித்தார்.
இது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டாலும், பல்வேறு கச்சேரிகளில், ஒன்றாக பணியாற்றி வருகின்றனர். இதனால் ஆச்சரியம் அடைந்த நெட்டிசன்கள், இதுகுறித்து ஜி.வி.பிரகாஷிடம் இணையத்தில் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அவர், நாங்கள் ரொம்ப professional-ஆன நபர்கள். ஒருவர் மீது ஒருவர், மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம். அந்த மரியாதைக்காக நாங்கள் ஒன்றாக பணியாற்றுகிறோம் என்று கூறியுள்ளார்.