செயற்கைகோள்கள் ஒன்றிணைக்கும் திட்டம் வெற்றி – பிரதமர் மோடி வாழ்த்து!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைக்கும் திட்டம் டாக்கிங் பரிசோதனை என்று அழைக்கப்படுகிறது. இதுவரை, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய 3 நாடுகள் மட்டும் தான், இந்த பரிசோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளன. மிகவும் சவாலான இந்த திட்டத்தை, தற்போது இந்தியாவும் வெற்றிகரமாக முடித்துள்ளது.

அதாவது, ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-60 ராக்கெட், தலா 220 கிலோ எடை 2 செயற்கைக்கோள்களையும் சுமந்தபடி கடந்த 30-ம் தேதி விண்ணில் பாய்ந்தது.

இதையடுத்து ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி செயற்கைகோள்களை ஒருங்கிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. விண்வெளி டாக்கிங் பரிசோதனை திட்டத்தின் வழியே 2 செயற்கைக்கோள்களும் ஒன்றிணைக்கப்பட்டன. எனவே, இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி, தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர், விண்வெளியில் செயற்கைக்கோள்களை இணைப்பதை வெற்றிகரமாக சாதித்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஒட்டுமொத்த விண்வெளி சகோதரர்களுக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்தார். மேலும், இது வரும் ஆண்டுகளில் இந்தியாவின் லட்சிய விண்வெளி பயணங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க படியாகும் என்றும் அவர் கூறினார்.

RELATED ARTICLES

Recent News