வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சமந்தா! வீடியோ வைரல்!

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பிசியாக நடித்து வருபவர் சமந்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருந்து வரும் இவர், அவ்வப்போது தனது செயல்பாடுகளையும், புகைப்படங்களையும், வீடியோக்களையும், சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது புதிய வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், வெறித்தனமாக அவர் உடற்பயிற்சி மேற்கொள்கிறார். மேலும், புதிய வருடம் தொடங்கி 2 வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால், உங்களது புதிய Resolution தவறிவிட்டதா? இங்கேயும் அப்படி தான்.

இந்த மாதிரி பல முறை, Resolution தவறி இருக்கிறது” என்றும் அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். மேலும், சில மோசமான நாட்கள், நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்பதை குறிக்கவில்லை. சில நேரம் நாம் ஓய்வு எடுப்போம். அப்படி தான் தற்போது நாட்கள் சென்றுக் கொண்டிருக்கிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.

RELATED ARTICLES

Recent News