இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்காக பொது கழிப்பறைகளை கட்ட உத்தரவிட வேண்டும் என்று, பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை, நீதிபதிகள் இன்று விசாரித்தனர்.
அப்போது, கழிவறை என்பது அனைவருக்கமான அடிப்படை வசதிகளில் ஒன்று என்று தெரிவித்தனர். எனவே, அனைத்து நீதிமன்றங்களிலும், அனைவரும் எளிதில் அணுகக்கூடிய கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இந்த பணிகளை கண்காணிக்க 6 வாரங்களுக்குள் அனைத்து மாநில ஐகோர்ட்டுகளிலும் ஒரு நீதிபதி தலைமையிலான குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.