மத கஜ ராஜா படத்தின் வசூல் என்ன?

சுந்தர் சி இயக்கத்தில், விஷால், சந்தானம், அஞ்சலி, வரலஷ்மி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மத கஜ ராஜா. கடந்த 12-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 7 நாட்களில், 39 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இன்னும் சில நாட்களில், 50 கோடி ரூபாய் என்ற இமாலய வசூலை, இப்படம் வசூலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 12 வருடங்களுக்கு முன்பு ரிலீஸ் ஆக வேண்டிய இந்த திரைப்படம், தற்போது ரிலீஸ் ஆகி, நல்ல வரவேற்பை பெற்றிருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News