தங்கத்தின் விலை என்பது, ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. நேற்று ஒரு சவரன் தங்கம் 59 ஆயிரத்து 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
மேலும், ஒரு கிராம் தங்கம், 7 ஆயிரத்து 435 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதன்படி, ஒரு கிராம் தங்கம், 15 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 450 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், ஒரு சவரன் தங்கம், 120 ரூபாய் உயர்ந்து, 59 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் தான், இந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.