“வளர்ச்சி என்ற பெயரில் மக்களை அழிக்காதீர்கள்” – விஜய் அதிரடி பேச்சு!

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், கடந்த 900 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களது ஆதரவுகளை கூறி வந்தனர். இந்நிலையில், இன்று பரந்தூர் போராட்டக்காரர்களை, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சந்தித்தார்.

அப்போது அவர்களிடம் உரையாற்றிய அவர், தனது கள அரசியல் பயணம் பரந்தூரில் இருந்து துவங்குகிறது என்று தெரிவித்தார். மேலும், எதிர்கட்சியாக இருக்கும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், ஆளுங்கட்சியாக மாறியபோது விவசாயிகளுக்கு எதிராகவும் ஆளும் அரசு உள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய விஜய், வளர்ச்சி முக்கியம்தான். ஆனால், வளர்ச்சி என்ற பெயரில், மக்களை அழிக்காதீர்கள் என்று கூறினார். விமான நிலைய திட்டத்தை எதிர்க்கவில்லை. பரந்தூரில் விமான நிலையம் வேண்டாம் என்றுதான் கூறுகிறேன் எனவும் அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News