ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தேர்தல் அதிகாரி மாற்றம்!

ஈரோடு கிழக்கு தொகுதியில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ-வாக பதவி வகித்து வந்தார். அவரது மரணத்தையடுத்து, அந்த தொகுதிக்கு வரும் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், காங்கிரஸ்-க்கு பதிலாக, திமுகவின் சந்திரகுமார் என்ற வேட்பாளர் களமிறங்கியுள்ளார். மேலும், அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சியினர், தேர்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்திருந்தனர். இதனால், திமுக, நாதக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளிட்ட 46 பேர், தேர்தலை சந்திக்க உள்ளனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அதிகாரி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தும் அதிகாரியாக செயல்பட்டு வந்த மணிஷ் மாற்றப்பட்டு புதிய அதிகாரியாக ஸ்ரீகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒசூர் மாநகராட்சி ஆணையராக உள்ள ஸ்ரீகாந்த் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News