“பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர்” – சீமான் தாக்கு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சமீபத்தில் பெரியார் குறித்து, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது, பெரியாரிய ஆதரவாளர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள காவல்நிலையங்களில், பல்வேறு வழக்குகள் சீமான் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள், அவரது வீட்டை முற்றுகையிட குவிந்துள்ளனர். அதாவது, சென்னை நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டின் முன்பு, பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தை சேர்ந்தவர்கள் முற்றுகை போராட்டத்திற்காக குவிந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, எதிர்ப்பு தெரிவிக்க வந்திருக்கும் அமைப்பினருக்கு எதிராக, நாம் தமிழர் கட்சியினரும் பலர் அங்கு குவிந்துள்ளனர். இவ்வாறு பரபரப்பான சூழல் அங்கு நிலவி வருவதால், 200-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், “பெரியார் கூறியதை எடுத்துச்சொல்கிறேன், அதில் என்ன தவறு உள்ளது. பெரியாரா, பிரபாகரனா? என்று மோதிப்பார்த்துவிட வேண்டியதுதான்.

பெரியார் குறித்து எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அங்கு பதில் கூறிக்கொள்கிறேன். பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழில் என்ன இருக்கிறது என்று கேட்டது பெரியார். தமிழ் மொழியை சனியன் என்று குறிப்பிட்டவர் பெரியார் என்று கூறினார்.

RELATED ARTICLES

Recent News