இன்று விசாரணைக்கு ஆஜரான கதிர் ஆனந்த்! அதிகாரிகள் தொடர் விசாரணை!

கடந்த 2019-ஆம் ஆண்டு அன்று, நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், திமுக சார்பில், வேலூர் தொகுதியில், துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது, பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், அந்த தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டிருந்தது.

மேலும், துரைமுருகன், கதிர் ஆனந்த், அவர்களுக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில், சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், 11 கோடியே 55 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் மீண்டும் நடத்தப்பட்ட தேர்தலில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்று எம்.பி. ஆனார்.

இந்நிலையில், எம்.பி. கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோர், மீது காவல்நிலையத்தில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறையினர், கதிர் ஆனந்த், பூஞ்சோலை சீனிவாசன் உள்ளிட்டோரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில், சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், சுமார் ரூ.14 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களும், ரூ.75 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி அமலாக்கத்துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது.

இதற்கிடையே கதிர் ஆனந்த் எம்.பி.யை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று ஏற்கனவே அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. இந்நிலையில் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் ஆஜராகி உள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News