சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலஷ்மி, சந்தானம் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் மத கஜ ராஜா. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய இந்த திரைப்படம், பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, கடந்த 12-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆனது.
முதல் நாளிலேயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், வசூலிலும் சாதனை படைத்து வந்தது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது.
அதன்படி, 10 நாட்களில் உலக அளவில், இப்படம் 46 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். 12 வருட பழைய மேக்கிங்கை கொண்ட இந்த திரைப்படம், இவ்வளவு பெரிய தொகையை வசூலித்திருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.