ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – தபால் வாக்குப்பதிவு தொடக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 5-ஆம் தேதி அன்று, நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் என்று மொத்தமாக 46 பேர், களம் காண உள்ளனர். அந்த தொகுதியில், பிரச்சார பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், இந்த தேர்தலுக்கான தபால் வாக்குப் பதிவு, தற்போது தொடங்கி, தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டவர்களும், மாற்றுத்திறனாளிகளும், தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

ஒட்டுமொத்தமாக, 256 பேர் தபால் வாக்குகள் செலுத்த உள்ள நிலையில், வாக்குசாவடி அலுவலர்கள், நேரடியாக அவர்களின் வீடுகளுக்கு சென்று, வாக்குகளை பெற உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை, இந்த பணி நடக்கும் என்றும், வரும் 27-ந்தேதி வரை, தபால் வாக்குகள் பதிவு செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News