2025-ஆம் ஆண்டுக்கான, தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டத் தொடர், சமீபத்தில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில், பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகள், பாலியல் சீண்டல்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளை உயர்த்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, இந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சட்டத்திருத்த மசோதாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒப்புதல் வழங்கி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு, இந்த சட்டத்திருத்த மசோதா அனுப்பி வைக்கப்பட உள்ளது.