மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான கட்சிகளில் ஒன்றாக உள்ள சிவசேனாவை, நிறுவியவர் தான் பாலாசாகேப் தாக்கரே. தீவிர வலது சாரி, இந்து தேசியவாதியாக இருந்த இவர், அம்மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைவராகவும், கார்டூனிஸ்டாகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்நிலையில், இவரது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அவர் கூறியிருப்பது பின்வருமாறு :-
“பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்த நாளை முன்னிட்டு, நான் அவருக்கு அஞ்சலி செலுத்தினேன். இவர், மக்கள் நலன் மீது காட்டிய அர்ப்பணிப்புக்காக, அனைவராலும் மதிக்கப்படுகிறார்.
மேலும், மகாராஷ்டிராவின் வளர்ச்சிகாக, நினைவுப்படுத்தப்படுகிறார். இவருடைய முக்கியமான நம்பிக்கைகளில், எப்போதும் சமரசமே செய்துக் கொள்ளாதவர் மற்றும் இந்திய கலாச்சாரத்தின் பெறுமையை மேம்படுத்த தனது பங்களிப்பையும் வழங்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.