நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் ஜெயிலர். மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, சாதனை படைத்தது.
ரஜினியின் ஸ்டைலும், நெல்சனின் விறுவிறுப்பான கதையும், அனிருத்தின் தரமான இசையும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்திருந்தது. இதற்கிடையே, இப்படத்தின் 2-ஆம் பாகம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தில், அனிருத் வாங்க உள்ள சம்பளம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, 18 கோடி ரூபாயை, அவர் சம்பளமாக வாங்க உள்ளாராம்.