விக்னேஷ் சிவன் இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெணி. இந்த திரைப்படத்தின் தயாரிப்பு பணி, நீண்ட நாட்களாக நடந்து வரும் நிலையில், சமீபத்தில் பாடல் ஒன்று வெளியாகி, ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.
ஆனால், அதன்பிறகு, எந்தவொரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இவ்வாறு இருக்க, இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து, புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, வரும் மே 16-ஆம் தேதி அன்று, இப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல், விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.