குடியரசு தினம்.. டெல்லியில் குடியரசு தலைவர்.. சென்னையில் ஆளுநர்.. கொடி ஏற்றி மரியாதை..

ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி 26-ஆம் தேதி அன்று, இந்தியாவில் குடியரசு தின விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், 76-வது குடியரசு தின விழா, இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். இதேபோல், தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள மெரினா கடற்கரையின் உழைப்பாளர் சிலை அருகே, குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

அங்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடியேற்றி, மரியாதை செலுத்தினார். அப்போது, இந்திய விமானப் படை மூலமாக, மலர்கள் தூவப்பட்டன.

இந்த நிகழ்வில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம், முப்படையசேர்ந்த அதிகாரிகள், உயர் அரசு அதிகாரிகள் என்று பலர் கலந்துக் கொண்டு, தேசியக் கொடிக்கு சல்யூட் அடித்து, மரியாதை செலுத்தினர். இதையடுத்து, பல்வேறு வீர தீர செயல்களுக்காக, பதக்கங்கள் வழங்கும் விழா, நடைபெற்றது.

RELATED ARTICLES

Recent News