சமூகநீதி போராளிகளின் மணிமண்டபம்.. திறந்து வைத்த முதலமைச்சர்..

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியில், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு, 4 கோடி ரூபாய் மதிப்பில் நினைவு அரங்கம் கட்டப்பட்டுள்ளது.

இதேபோல், இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளுக்கு, 5.70 கோடி ரூபாய் மதிப்பில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்த நினைவு அரங்கத்தையும், மணிமண்டபத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

RELATED ARTICLES

Recent News