காலத்தால் அழியாத பல்வேறு காதல் கதைகளை தமிழ் சினிமாவில் இருந்து வருகிறது. அந்த வகையில், எந்த காலத்து காதலர்களும் ரசித்து பார்க்கும் படமாக இருப்பது அலைபாயுதே.
மணிரத்னம் இயக்கத்தில், மாதவன், ஷாலினி ஆகியோர், முக்கிய வேடத்தில் நடித்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அலைபாயுதே படத்தில் வேறொருவரை நடிக்க வைக்க முயற்சி செய்ததாக, மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
அதாவது, அலைபாயுதே படத்தில், மாதவனுக்கு பதிலாக ஷாருக்கானையும், ஷாலினிக்கு பதிலாக கஜோலையும் வைத்து படத்தை இயக்க ஆரம்பத்தில் முயற்சி செய்ததாக, மணிரத்னம் தெரிவித்துள்ளார். இந்த பேட்டி, பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.