விழுப்புரம் மாவட்டத்தில் 21 சமூக நீதி போராளிகளின் மணிமண்டபமும், மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் கோவிந்தசாமியின் நினைவு அரங்கமும், 5.70 மற்றும் 4 கோடி ரூபாய் மதிப்பில் முறையே கட்டப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தையும், நினைவு அரங்கத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பேசிய முதலமைச்சர், எல்லோருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் ஆட்சி நடத்தி வருவதாகவும், நதி இல்லை என புலம்பாமல் மக்களின் குறைகளை நீக்கும் அரசாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பிறர் நல்லது செய்தால் எதிர்கட்சித்தலைவருக்கு பிடிக்காது என்றும், நம்பர் 1 முதல்வர் என்பதை விட நம்பர் 1 தமிழ்நாடு என்பதுதான் எனது இலக்கு என்றும் தெரிவித்தார். மேலும், என்னை முன்னிலைப்படுத்த நான் எதுவும் செய்யவில்லை. தமிழகத்தை முன்னிலைப்படுத்தவே உழைக்கிறேன் என்று கூறினார்.