தனுஷ் தற்போது தனது இட்லிக் கடை படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த படத்தை முடித்துவிட்டு, பல்வேறு வெற்றி இயக்குநர்களுடன் அவர் கூட்டணி சேர இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், தனுஷின் அடுத்த படத்தை, லப்பர் பந்து பட இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்க இருப்பதாக, கூறப்பட்டது.
ஆனால், தற்போது இந்த படத்தில் இருந்து அவர் விலகிவிட்டதாக, தகவல் பரவி வருகிறது. இந்த தகவல் குறித்து ஆராய்ந்து பார்த்ததில், தனுஷின் படத்தில் இருந்து தமிழரசன் பச்சமுத்து விலகியதாக கூறப்படும் தகவல் வதந்தி என்று தெரியவந்துள்ளது.
இருவரும் நிச்சயம் இணைவார்கள் என்றும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், தமிழரசன் கூறிய கதையை கேட்டு, தனுஷ் பிரம்மிப்பு அடைந்துவிட்டதாகவும், கோலிவுட் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.