விஜய் நடித்து வரும் ஜன நாயகன் என்ற படத்தை, எச்.வினோத் தற்போது இயக்கி வருகிறார். இந்த திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இயக்குநர் எச்.வினோத்தின் அடுத்த படம் தொடர்பான தகவல் கிடைத்துள்ளது.
அதாவது, தீரன் அதிகாரம் ஒன்று என்ற படத்தை, எச்.வினோத் இயக்கியிருந்தார். கார்த்தி ஹீரோவாக நடித்த இப்படத்தை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, தயாரிப்பு நிறுவனம் அதிக ஈடுபாடு காட்டி வருகிறது. இதற்காக, எச்.வினோத்திடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த பேச்சுவார்த்தையில், சுமூகமான முடிவு எடுக்கப்பட்டால், தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் 2-ஆம் பாகம் உருவாகும்.