2-வது ஆண்டு விழா.. தொண்டர்களுக்கு கடிதம் எழுதிய விஜய்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய். இவர், கடந்த ஆண்டு, தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவக்கியிருந்தார். மேலும், வரும் 2026-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், போட்டியிடப் போவதாகவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், இந்த கட்சி தொடங்கி, 2 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதனையொட்டி, தளபதி விஜய் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் ரத்த நாளங்களான நம் கழகத் தோழர்களை அரசியல்மயப்படுத்தி, மக்கள் மத்தியில் அவர்களுக்கெனத் தனிப்பெரும் மரியாதையை மக்கள் பணிகள் மூலம் உருவாக்குவதே எப்போதும் நமது இலக்காக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும், அந்த இலக்கின் முதல் படிதான் வருகிற 2026 தேர்தல் என்றும், இந்த வேளையில், கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவைக் கொண்டாடும் பொருட்டு, தமிழகமெங்கும் மக்கள் நலத்திட்டப் பணிகளை நம் தோழர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து, தோழர்களே. தமிழக மண்ணைச் சேர்ந்த இந்த மகன் உங்களோடு நிற்கிறேன். நாம், நமது மக்களோடு சேர்ந்து களத்தில் நிற்போம். மாபெரும் அரசியல் மாற்றத்தை நிகழ்த்துவோம். இரட்டைப் போர் யானைகள் பலத்தோடு எதிரிகளை வெல்வோம். வாகைப் பூ மாலை சூடுவோம். வெற்றி நிச்சயம் என்றும், அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News