திட்டமிட்டபடி ஜே.இ.இ முதன்மை தேர்வு நடக்குமா? கல்வியாளர்கள் கருத்து என்ன?

ஐ.ஐ.டி, என்.ஐ.டி போன்ற முன்னணி கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்காக ஜேஇஇ தேர்வுகள் நடத்தப்படுகிறது. ஜே.இ.இ முதன்மைத் தேர்வு 2023 அடுத்த ஆண்டு ஜனவரியில் நடத்தப்படும் என தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் ஜே.இ.இ முதன்மை தேர்வுத் தேதியை ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து மறுபரிசீலனை செய்ய மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜே.இ.இ முதன்மை தேர்வு 12 ஆம் வகுப்பு தேர்வுகளோடு ஒன்றாக வருகிறது. முதல் பிரிவு ஜனவரி மாதத்திலும் இரண்டாம் பிரிவு ஏப்ரல் மாதத்திலும் நடைபெறும். தேர்வுகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுமே தவிர மன அழுத்தம் தரும் விதமாக இருக்க கூடாது என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

RELATED ARTICLES

Recent News