டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், நாளை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய 3 கட்சிகள் முதன்மையாக போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான முடிவுகள், 8-ஆம் தேதி அன்று வெளியிடப்பட உள்ளன.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அதிஷி மீது, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, டெல்லியில் உள்ள கல்காஜி என்ற சட்டமன்ற தொகுதியில், அதிஷியும், அந்த தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளரும், தொண்டர்களும் சென்றுள்ளனர்.
ஆனால், கூட்டமாக சென்றதால், அங்கிருந்து களைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அவர்கள் களைந்து செல்லாதது மட்டுமின்றி, காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதன்காரணமாக, தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி அதிஷி மீதும், தாக்குதல் நடத்திய இரண்டு ஆம் ஆத்மி நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.