திருப்பரங்குன்றம் விவகாரம்.. உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முக்கிய உத்தரவு!

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள முருகன் கோவிலின் மலையில், அசைவ உணவு சாப்பிட்டதாக, சர்ச்சை ஒன்று எழுந்தது. இதனை கண்டித்து, போராட்டம் நடத்துவதாக, இந்து அமைப்பினர் சிலர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 12 மணி வரை 144 தடை விதிப்பதாக, மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

மேலும், இந்த போராட்டத்தில் கலந்துக் கொள்வதற்காக வந்த இந்து அமைப்பினரையும் அதன் முக்கிய நிர்வாகிகளையும் காவல்துறையினர் தொடர்ச்சியாக கைது செய்தும், வீட்டுச் சிறையிலும் வைத்து வருகின்றனர். இந்நிலையில், போராட்டம் நடத்த அனுமதி கேட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதுரை பழங்காநத்தம் பகுதியில் 5 மணியில் இருந்து 6 மணி வரை போராட்டம் நடத்த அனுமதி வழங்கினர்.

மேலும், பொதுமக்களை தொந்தரவு செய்யக் கூடாது, அரசியல் கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளையும் விதித்தனர். இதையடுத்து, போராட்டக்காரர்கள், திருப்பரங்குன்றம் கோவில் உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News