தலைநகர் டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும், இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு, இன்று மாலை 6 மணியுடன் முடிவுக்கு வந்துள்ளது.
இந்த தேர்தலில் 5 மணி நேர நிலவரப்படி, 57.78 சதவீதம் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த தேர்தலுக்கான முடிவுகள், வரும் 8-ஆம் தேதி அன்று அறிவிக்கப்பட உள்ளது.
இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலும், தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த தேர்தலில், 5 மணி நேர நிலவரப்படி 64.02 சதவீத வாக்குகள் மொத்தமாக பதிவாகி உள்ளது.