திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பனியன் கம்பெணி ஒன்றில் பணியாற்றி வந்த கர்ப்பிணி பெண், மருத்துவ பரிசோதனைக்காக ரயிலில் ஆந்திராவுக்கு சென்றுள்ளார். அப்போது, ரயிலில் தனியாக இருந்த அந்த பெண்ணிடம், மர்ம நபர்கள் சிலர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அந்த பெண் கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, பதற்றம் அடைந்த மர்ம நபர்கள், அந்த பெண்ணை, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பின்னர், படுகாயத்துடன் தண்டவாளத்தில் கிடந்த கர்ப்பிணியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக ஹேமராஜ் என்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், நடத்தப்பட்ட விசாரணையில், ரயிலில் பயணித்த பல்வேறு பெண்களிடம், அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதுமட்டுமின்றி, பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இன்னொருவரை தேடும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.