டெல்லி, ஈரோடு கிழக்கு வாக்கு எண்ணிக்கை.. முன்னிலை நிலவரம்..

டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும், ஒரே கட்டமாக, கடந்த 5-ஆம் தேதி அன்று தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே, மும்முனை போட்டி நிலவி வந்தது. இந்த தேர்தலுக்கான, வாக்கு எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், 10 மணி நிலவரப்படி, முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, பாஜக 42 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், காங்கிரஸ் கட்சி, ஒரு இடத்தில் கூட முன்னிலை வகிக்கவில்லை.

இதேபோல், ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, இன்று காலை 8 மணி முதல் தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 25 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்று திமுக முன்னிலையிலும், 3 ஆயிரத்து 980 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி பின்னடைவையும் சந்தித்து வருகின்றன.

RELATED ARTICLES

Recent News