அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவான திரைப்படம் விடாமுயற்சி. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், கடந்த 6-ஆம் தேதி அன்று ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், தற்போது கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அஜித் ரசிகர்களை கூட திருப்திப்படுத்தாத இப்படம், சாதாரண ரசிகர்களையும் கவரவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, 2 நாட்கள் முடிவில், உலகம் முழுவதும், 72 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளதாம்.