டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்குமான தேர்தல், கடந்த 5-ஆம் தேதி அன்று, ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில், பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகள் இடையே, மும்முனை போட்டி நிலவி வந்தது.
இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணி, நேற்று நடைபெற்ற நிலையில், பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும், வெற்றிப் பெற்றன. இதனால், பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை கைப்பற்றி, பாஜக டெல்லியில் 27 வருடங்களுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், டெல்லியின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது தொடர்பாக, இன்று பாஜக ஆலோசனை நடத்தி வருகிறது. இதில், பர்வேஷ் சர்மா, பன்சூரி ஸ்வராஜ், வீரேந்திர சச்தேவா ஆகியோர் முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
பா.ஜ.க. தேசிய செயலர் துஷ்யந்த் கவுதம், மனோஜ் திவாரி எம்.பி. உள்ளிட்டோர் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.