திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த கர்ப்பிணி பெண், மருத்துவ சிகிச்சைக்காக, தனது சொந்த ஊருக்கு, கடந்த 6-ஆம் தேதி அன்று சென்றார். அப்போது, ரயிலில் ஏறிய இரண்டு பேர், அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அந்த பெண் ஒத்துழைக்காததால், அவரை ரயிலில் இருந்து கீழே தள்ளிய 2 பேரும், அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த அந்த பெண்ணுக்கு, கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.தற்போது, தனியார் மருத்துவமனையில் அந்த பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அந்த பெண்ணின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாயை அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.