சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய அரசியல் கட்சியை துவங்கியுள்ளார். இவரது அரசியல் பயணம், தமிழகத்தில் எந்தவிதமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று, பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை கூறி வருகின்றனர்.
ஒருசிலர், இவர் எக்ஸ் பக்கத்திலேயே அரசியல் செய்து வருகிறார் என்று, விமர்சித்து வருகின்றனர். இவ்வாறு இருக்க, மதுரை மாவட்டம் எல்லீஸ் நகர் பகுதியில், தேமுதிக கட்சியின் பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சினிமாத்துறையில் இருந்து அனைத்தையும் விட்டுவிட்டு, அரசியலுக்கு வருகிறார் என்றால், அவரை நாம் பாராட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஆனால், அரசியலில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால், நாலுக்கு நாலு சுவற்றுக்குள் விஜய் அரசியல் செய்யக் கூடாது என்றும், வீதிக்கு வந்து மக்களை சந்திக்க வேண்டும் என்றும், பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்றும், கூறியுள்ளார்.