கோவை மாவட்டத்தில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்திற்கு, சமீபத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. ஆனால், இந்த பாராட்டு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துக் கொள்ளவில்லை.
இதனால், அதிமுக நிர்வாகிகள் இடையே பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும், அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டதா? என்றும், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் பகுதியில், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராட்டு விழாவுக்கான மேடையிலும், விலம்பர பலகைகளிலும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் படங்கள் இடம்பெறவில்லை என்றும், அதனால் தான் நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.
அத்திக்கடவு – அவிநாசி திட்டம் என்றால் என்ன?
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வறட்சி மிக்க பகுதிகளில் உள்ள குளங்களில், நீர் நிலைகளில், பவானி ஆற்றில் உள்ள 2 ஆயிரம் கனஅடி உபரி நீரை நிரப்புதல் ஆகும். இந்த திட்டத்தின் மூலம், 1.30 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்று கூறப்படுகிறது.