செங்கோட்டையனின் குற்றச்சாட்டு! விளக்கம் தந்த ஜெயக்குமார்!

அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்காக, விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நேற்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த பாராட்டு விழாவில், அதிமுகவின் பல்வேறு முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்ட நிலையில், செங்கோட்டையன் மட்டும் கலந்துக் கொள்ளவில்லை.

இதனால், அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நிகழ்ச்சி மேடையில், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம்பெறவில்லை. அதனால், நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், செங்கோட்டையனின் இந்த குற்றச்சாட்டுக்கு, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். அதாவது, அவர் தற்போது செய்தியாளர்களை சந்தித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், விவசாயிகள் கூட்டமைப்பு நடத்திய பாராட்டு விழாவில், அரசியல் கலப்பு இருக்கக் கூடாது என்பதால் தான், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்கள் வைக்கவில்லை என்றும், அந்த விழாவுக்கு அரசியல் வண்ணம் கொடுக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News