திரு முருகப்பெருமான் தமிழர்களின் கடவுளாக பார்க்கப்படுகிறார். இவரது திருவிழாக்களில் மிகவும் முக்கியமான ஒன்றாக, தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது.
வீராதி வீரனாக விளங்கக் கூடிய முருகப்பெருமான், சூரபத்மன் என்ற அரக்கனை கொன்றதை நினைவு கூறும் வகையில், தை மாதத்தில் பூசம் நட்சத்திரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, இன்று உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில், தைப்பூசத் திருவிழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாக, முருகனின் அறுபடை கோவில்களில், விசேஷ பூஜைகளும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பூஜைகளில், முருகப் பக்தர்கள் திரளாக வந்து, தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.