“என்கிட்ட கேக்காதீங்க.. விஜய் கிட்ட கேளுங்க” – பிரேமலதா பேட்டி!

தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் கொடி அறிமுகம் செய்து, இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு, தேமுதிக சார்பில் சிறப்பு விழா நடத்தப்பட்டது. இதில் கலந்துக் கொண்ட பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், விஜயிடம் கூட்டணி அமைப்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தபோது, நாங்கள் 20 வருட அனுபவம் கொண்ட கட்சி. இதுகுறித்து நீங்கள் எங்களிடம் கேட்கக் கூடாது. விஜயிடம் தான், நீங்கள் இதுபற்றி கேட்க வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து, அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “இதுகுறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை” என்றும், “2026-ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில், தேமுதிக இருக்கும் கூட்டணி தான், வெற்றி பெறும்” என்றும் தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News