மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. அனிருத் இசையமைத்த இந்த படத்தை, லைக்கா நிறுவனம் பல்வேறு போராட்டங்களை கடந்து தயாரித்தது.
கடந்த 6-ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. சில அஜித்தின் ரசிகர்களும் கூட, இப்படத்திற்கு, நெகட்டிவ்வான விமர்சனங்களை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தற்போது தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 6 நாட்களில், 139 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாம். இது, படத்தின் பட்ஜெட்டை காட்டிலும் குறைவான தொகை என்று கூறப்படுகிறது.