“இந்தியாவின் சுதந்திரப் போராட்டம்.. மார்சேய்-க்கு முக்கிய பங்கு” – பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் நாட்டிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். அங்குள்ள பகுதிகளுக்கு செல்வது தொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில், பிரதமர் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், சவார்க்கர் குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “மார்சேய் பகுதிக்கு வந்தடைந்தேன். இந்தியாவின் விடுதலை போராட்டத்தின் பயணத்தில், இந்த நகரம் குறிப்பிடத்தக்க பங்கை கொண்டுள்ளது. மிகவும் தைரியமான முறையில், இங்கிருந்து தான் வீர சவார்க்கர் தப்பிக்க முயற்சி செய்தார்” என்று பதிவிட்டார்.

மேலும், “பிரிட்டிஷ் வசம், சவார்க்கரை ஒப்படைக்க கூடாது என்று கோரிக்கை வைத்த மெர்சைல் பகுதி மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் நான் விரும்புகிறேன். வீர சவார்க்கரின் இந்த தைரியம், தொடர்ச்சியாக பல்வேறு தலைமுறைகளுக்கு ஊக்கமளித்து வருகிறது” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News