மனிப்பூர் காவல்துறையின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
அந்த பதிவில், “இன்று 8 மணி அளவில், ஒரு அசம்பாவித சம்பவ நடந்துள்ளது. மேற்கு இம்பால் மாவட்டத்தில், லாம்சாங் பகுதியில் உள்ள சி.ஆர்.பி.எஃப் முகாமில், சொந்த ராணுவ வீரர்களை கொலை செய்த சம்பவம் நடந்துள்ளதாக, சந்தேகிக்கப்படுகிறது.
அதாவது, ஒரு சி.ஆர்.பி.எஃப் வீரர் துப்பாக்கி சூடு நடத்தியதில், சக வீரர்கள் 2 பேர் உயிரிழந்தும், வீரர்கள் 8 சக காயமும் அடைந்துள்ளார்கள். பின்னர், அந்த வீரர் தனது துப்பாக்கியால், தன்னைத் தானே சுட்டு, தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
தற்கொலை செய்துக் கொண்ட வீரர், F-120 Coy சி.ஆர்.பி.எஃப் பிரிவை சேர்ந்தவராவார். காவல்துறை மற்றும் சி.ஆர்.பி.எஃப்-ன் மூத்த அதிகாரிகள், சம்பவ நடந்த இடத்திற்கு, விரைந்து சென்றுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.