மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித், த்ரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், முதல் நாளில் இருந்தே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
அஜித்தின் ரசிகர்களை கூட, இந்த திரைப்படம் கவரவில்லை என்று, தனிநபர் விமர்சனங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இவ்வாறு இருக்க, இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, 8 நாட்களில், உலகம் முழுவதும், 141 கோடி ரூபாயை, இப்படம் வசூலித்துள்ளது.