தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்!

தங்கத்தின் விலை என்பது கடந்த சில மாதங்களாக, மிக அதிக அளவில் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, இந்த மாதத்தில், 64 ஆயிரம் ரூபாய்க்கும் மேல், தங்கத்தின் விலை உயர்ந்து, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது.

இந்நிலையில், தங்கத்தின் இன்றைய விலை நிலவரம் என்னவென்று தெரியவந்துள்ளது. அதன்படி, நேற்று 7 ஆயிரத்து 890 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று 50 ரூபாய் உயர்ந்து, 7 ஆயிரத்து 940-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும், நேற்று 63 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று 400 ரூபாய் அதிகரித்து, 63 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையை பொறுத்தவரை, எந்தவொரு மாற்றமுமின்றி, ஒரு கிராம் 108 ரூபாய்க்கும், ஒரு கிலோ 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

RELATED ARTICLES

Recent News