திருமண மண்டபத்தின் வெளியே விளையாட்டு.. சுட்டுக் கொல்லப்பட்ட சிறுவன்..

மத்திய பிரதேச மாநிலம் மொரினா பகுதியில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில், இன்று திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தில் கலந்துக் கொள்வதற்காக, மணமகன் குடும்பத்தை சேர்ந்த தம்பதி, தங்களது 5 வயது மகனுடன் திருமண நிகழ்வுக்கு வந்துள்ளனர்.

அப்போது, திருமண மண்டபத்திற்கு வெளியே, அந்த சிறுவன் விளையாடிக் கொண்டு இருந்தான். அந்த சமயத்தில், திடீரென பைக்கில் வந்த நபர், சிறுவனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

இதில் படுகாயம் அடைந்த சிறுவன், பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை துப்பாக்கியால் மர்ம நபர் கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News