ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், லியோனார்டோ டி காப்ரியோ நடிப்பில், கடந்த 1997-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் டைட்டானிக். மிகப்பெரிய வெற்றிப் பெற்ற இந்த திரைப்படம், உலக அளவில் வசூலிலும் சாதனை படைத்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த கேட் வின்ஸ்லெட், தற்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, இவர், குட்பாய் ஜூன் என்ற படத்தின் மூலம், இயக்குநராக மாறியுள்ளார்.
இயக்கம் மட்டுமின்றி, இப்படத்தில், நடித்து தயாரிக்கவும் செய்துள்ளார். இவருடன், டோனி கோலெட், ஜானி ஃப்ளைன் ஆகியோரும், முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.