பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் கடந்த 2022-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன திரைப்படம் சர்தார். ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்த திரைப்படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.
தற்போது, இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம் உருவாகி வருகிறது. இந்நிலையில், சர்தார் 2 குறித்து, முக்கிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது, இப்படம் வரும் ஜூலை மாதம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.