சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த திரைப்படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம், சமீபத்தில் ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
மேலும், ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, மிகப்பெரிய சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில், இப்படத்தின் குறிப்பிட்ட காட்சி குறித்து, அல்லு அர்ஜூன் பேசியுள்ளார்.
அதாவது, “ஜாதரா காட்சியில் புடவைக் கட்டிக் கொண்டு நடிக்க வேண்டும் என்று இயக்குநர் கூறியபோது பயந்தேன். பின்னர், அதை செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.