பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிராகன். நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை பார்த்த பெரும்பாலானவர்கள், பாசிட்டிவ்வான விமர்சனங்களை மட்டுமே வழங்கி வருகின்றனர். இந்நிலையில், இந்த திரைப்படத்தின் முதல் வசூல் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, முதல் நாளில் மட்டும், இப்படம் 10 கோடி ரூபாயை வசூலித்துள்ளதாம். இது, இப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஓபனிங்காக பார்க்கப்படுகிறது. மேலும், படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பால், இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.