சேம்பியன்ஸ் ட்ராஃபி 2025 : இந்தியா – பாகிஸ்தான் போட்டி துவக்கம்! தற்போதைய நிலவரம் என்ன?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், சேம்யின்ஸ் ட்ராபி என்ற கிரிக்கெட் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், 2025-ஆம் ஆண்டுக்கான சேம்யின்ஸ் ட்ராபி, சமீபத்தில் தொடங்கியது. இந்த முறை, இந்த தொடர், பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.

இந்திய வீரர்களின் பாதுகாப்பை காரணமாக வைத்து, இந்தியாவுக்கான போட்டி மட்டும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்குமான போட்டி, துபாயில் நடைபெற்று நடந்து வருகிறது. இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது.

தற்போது வரை, 4 ஓவர் முடிவில், 22 ரன்களை பாகிஸ்தான் அணி எடுத்துள்ளது. இதுவரை, எந்தவொரு விக்கெட்டையும் பாகிஸ்தான் அணி இழக்கவில்லை. இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி என்பது, பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருப்பதால், உலகம் பல்வேறு லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள், இப்போட்டியை நேரலையில் பார்த்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News